நீர்கொழும்பு மற்றும் தெஹிவளை - கல்கிசை கரையோரப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் அகற்றப்படவுள்ளது.
இதுதொடர்பாக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவிக்கையில் நாட்டைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதியில் உள்ள சட்டவிரோதக் கட்டிடங்கள் அனைத்தும் அகற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் கீழ், மிரிஸ்ஸ கரையோரப் பகுதியில் உள்ள சட்டவிரோதக் கட்டிடங்கள் அண்மையில் அகற்றப்பட்டன. கரையோரப் பாதுகாப்புச் சட்டத்திற்கு அமைய, கடுமையான சட்ட நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கரையோரப் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
No comments:
Post a Comment