கடந்த மார்ச் மாதம் கண்டி தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற வன்செயல் சம்பவங்கள் தொடர்பில் மெததும்பர பிரதேச சபையின் தலைவர் அசோக சமரக்கோன் மற்றும் பிரதேச சபையின் ஊழியர் ஒருவர் ஆகியோர் பொலிஸ் சி.ஐ.டி. பிரிவினர் விசாரணை நடாத்தி அவர்களது வாக்கு மூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விசாரணை சுமார் நான்கு மணிநேரம் நடாத்தப்பட்டுள்ளது. விசாரணையின் பின்பு மெததும்பர பிரதேச சபையின் தலைவர் அசோக சமரகோன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
மார்ச் மாதம் தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற வன்செயமுறைச் சம்பவங்களுடன் தான் சம்பந்தப்பட்டுள்ளதாக தெல்தெனிய பகுதியைச் சேர்ந்த சிலர் கொழும்பு சி.ஐ.டி. பிரிவுக்கு மனுவொன்று சமர்ப்பித்துள்ளதையடுத்து ரி.ஐ.டி. பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டேன் என்றார்.
நான் எந்தவொரு வன்செயல்களுடனும் தொடர்புபடாமையினால் விசாரணையின் பின்பு விடுதலை செய்யப்பட்டேன். மெததும்பர பிரதேச சபையின் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் இருக்கும் சில அரசியல்வாதிகளின் சூழ்ச்சியே இது.
என்னையும் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியையும் அபகீர்த்திக்குள்ளாக்கும் முயற்சிகளில் சில அரசியல் வாதிகள் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
Vidivelli
No comments:
Post a Comment