மாகாண சபைத் தேர்தலை பழைய முறைப்படி நடாத்த ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஆராய்வு - அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 2, 2018

மாகாண சபைத் தேர்தலை பழைய முறைப்படி நடாத்த ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஆராய்வு - அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்

மாகாண சபை தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறது என கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

புதிய தேர்தல் முறை தொடர்பாக சிக்கல்கள் பல இருப்பதாக அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் உட்பட புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலும் ஆராயப்பட்டது. இதன்போது பழைய முறைப்படி மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பாக இங்கு விரிவாக ஆராயப்பட்டதென்றும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

புதிய தேர்தல் முறையின் கீழ் பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளும் எந்தவொரு கட்சிக்கும் சுயாதீனமான அதிகாரத்தை நிலைநாட்டுவது முடியாத ஒருநிலை உட்பட பல பிரச்சினைகளை எழுந்துள்ளன.

இது தொடர்பாக தேவையான திருத்தங்கள் செய்யப்படும் வரை மாகாண சபை தேர்தல் பழைய முறைப்படியே செய்யப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

"அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" என்ற திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பலப்பிட்டிய ரேவத்த தேசிய பாடசாலையின் புதிய இரண்டு மாடி கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். 

இதன்போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

No comments:

Post a Comment