எனக்கு வேகம் மட்டும் அல்ல விவேகமும் இருக்கின்றது - அமைச்சர் மனோ கணேசன் - News View

About Us

About Us

Breaking

Monday, June 4, 2018

எனக்கு வேகம் மட்டும் அல்ல விவேகமும் இருக்கின்றது - அமைச்சர் மனோ கணேசன்

நாட்டில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இன ஒற்றுமையை தோற்றுவிக்கும் வகையில் தமது செயற்பாடுகள் இடம் பெற்று வருவதோடு, வடக்கு - கிழக்கு வாழ் தமிழ் முஸ்ஸீம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மொழி மூலம் சிங்கள மக்களுக்கு தெரியப்படுத்தும் பாரிய பொறுப்பை தாம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். 

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற அரச மற்றும் அரச சார்பாற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகளுக்கும் இடையில் இன்று (4) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. 

மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் இடம் பெற்ற குறித்த விசேட கலந்துரையாடலின் போது அமைச்சர் மனோ கனேசன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் செயலாளர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய உட்பட அமைச்சின் பிரதி நிதிகள், அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள், அருட்தந்தையர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

இதன் போது மன்னார் மாவட்டத்தில் கடந்த காலங்களில் அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதோடு, குறித்த அமைப்பபுக்கள் கடந்த காலங்களில் முகம் கொடுத்த நெருக்கடி தொடர்பிலும் தற்போதைய அவர்களின் செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது. 

இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

எனக்கு வேகம் மட்டும் இல்லை விவேகமும் இருக்கின்றது, கண்மூடித்தனமான வேகமாக மட்டும் இருந்தால் அது ஒரு விபத்தை ஏற்படுத்தி நானும் அழிந்து என் சார்ந்தவர்களையும் அழித்து விடும், எனவே வேகமாக மட்டுமல்ல விவேகமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment