தலவாக்கலையில் ஐந்து வயது சிறுமியை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தலவாக்கலை - லிந்துலை நகரசபை தலைவர் மற்றும் குறித்த சபையின் உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட 8 பேரை, எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் இன்று (11) நீதவான் பிரமோத ஜயசேகர முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இவ்வாறு 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தலவாக்கலையில் ஐந்து வயது சிறுமியை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் ஜூன் மாதம் 04 ஆம் திகதி தலவாக்கலை - லிந்துலை நகரசபை தலைவர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
அதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு பேர் ஜூன் மாதம் 05 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
கிரிஷாந்தன்



No comments:
Post a Comment