33 இலட்சத்து 38 ஆயிரம் ரூபா பெறுமதியான பென்ஸி வகையான மாணிக்க கற்கள் ஒரு தொகையை மறைத்து வைத்திருந்த ஒருவரை தங்கல்ல பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
தங்கல்ல பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பேருவளை பகுதியில் உள்ள மாணிக்கல் வியாபாரி ஒருவரிடம் இருந்து குறித்த மாணிக்க கற்களை அபகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணிக்க கற்களை வேறு ஒருவருக்கு விற்பனை செய்து தருவதாக கூறி அவற்றிற்கு பணம் வழங்காது அவற்றை மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த மாணிக்க கற்கள் அனைத்தையும் இரண்டு போத்தல்களில் அடைத்து தனது வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 12,200 கெரட் எடையுடைய மாணிக்க கற்களே இவ்வாறு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment