கவுதமாலாவில் வெடித்து சிதறிய பியுகோ எரிமலை - 6 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Sunday, June 3, 2018

கவுதமாலாவில் வெடித்து சிதறிய பியுகோ எரிமலை - 6 பேர் பலி

கவுதமாலா தலைநகரை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள பியுகோ எரிமலை வெடித்து சிதறியதில் ஆறு பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கவுதமாலா நாட்டின் தலைநகரனான கவுதமாலா சிட்டியில் இருந்து தென்மேற்கு பகுதியில் பியுகோ என்னும் எரிமலை உள்ளது. இந்த எரிமலை கடந்த சில நாட்களாக வெடித்து சிதறும் நிலையில் இருந்தது. 

இதனால் அதிலிருந்து கரும்புகை வெளியாகி வந்தன. இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்களை வெளியேறுமாறு அரசு அறிவித்தது.

இந்நிலையில், இந்த எரிமலை நேற்றிரவு வெடித்து சிதறியது. அதிலிருந்து எரிமலை குழம்பு அனைத்து திசைகளிலும் வழிந்தன. இந்த எரிமலை வெடிப்பிற்கு பின்னர் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வீடு ஒன்றில் தீப்பிடித்ததில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். மற்ற இரு சிறுவர்கள் எரிமலை வெடிப்பை பார்த்துக் கொண்டிருந்தபோது உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment