பெண்கள் இருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவருக்கு 20 வருட சிறை - News View

About Us

About Us

Breaking

Thursday, June 7, 2018

பெண்கள் இருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவருக்கு 20 வருட சிறை

2003 ஆம் ஆண்டு இரு பெண்களை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்தின் குற்றவாளிகள் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (07) 20 வருடமும் 6 மாத கால கடூழிய சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

சபுகஸ்கந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் உப பொஸில் பரிசோதகர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு உதவியாளர் ஆகிய இருவருமே இந்த வழக்கில் குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, குற்றவாளிகளுக்கு 70 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 2 இலட்சம் ரூபா வீதம் நஷ்டஈடு வழங்குமாறும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க உத்தரவிட்டுள்ளார். 

2003 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி சட்ட மா அதிபரால் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

நீண்ட ஒரு விசாரணையின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இவர்கள் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment