மீண்டும் கடும் மழை - நீர்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 7, 2018

மீண்டும் கடும் மழை - நீர்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு

மலையகத்தில் மீண்டும் கடும் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் லக்ஷபான நீர்தேக்கத்தின் வான் கதவு ஒன்றும் திறக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. 

மேலும் ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா ஆகிய வீதிகளின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ளும் வாகன சாரதிகள் மிக அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மலையக சதீஸ்குமார்

No comments:

Post a Comment