சுமார் 20 கிலோ கேரளா கஞ்சா பொலிஸாரால் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, June 10, 2018

சுமார் 20 கிலோ கேரளா கஞ்சா பொலிஸாரால் மீட்பு

மன்னார் பேசாலை பிரதேச சபைக்கு உட்பட்ட காட்டஸ்பத்திரி பகுதியில் நேற்று (10) பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சா ஒரு தொகை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 

மன்னார் புலனாய்வு துறையினர் மூலம் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து காட்டஸ்பத்திரி பகுதியில் பேசாலை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கேரளா கஞ்சா தொகையினை பொலிஸார் மீட்டுள்ளனர். 

இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 20 கிலோ 200 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த கஞ்சா உள்ளூர் விற்பனைக்காக அல்லது வேறு பிரதேசத்துக்கு கொண்டு செல்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்பதுதொடர்பில் பேசாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கடத்தல் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. கைப்பற்றபட்ட கஞ்சா மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (11) ஒப்படைக்கப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

No comments:

Post a Comment