செல்லுபடியான விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவரை கொள்ளுப்பிட்டி, வாலுக்காராம மாவத்தையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த வௌிநாட்டு பிரஜை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 35 வயதான சீனப் பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட் சீனப் பெண் கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (11) ஆஜர்செய்யப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.

No comments:
Post a Comment