சட்டவிரோதமான முறையில் 200 சிகரட் பெட்டிகளை நாட்டிற்குள் கொண்டுவர முற்பட்ட சீன நாட்டு பெண்கள் இருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் சீன நாட்டிலிருந்து வந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 881 விமானத்தில் குறித்த பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர்.
39 மற்றும் 40 வயதுடைய பெண்களே இவ்வாறு சிகரட் தொகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 40,000 சிகரட்கள் உள்ளடங்கிய 200 பெட்டிகள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட சிகரட்கள் 20 இலட்சம் ரூபா பெறுமதியுடையவை என சுங்க ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
குறித்த சிகரட் தொகை அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட பெண்களை எச்சரிக்கை விடுக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment