சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை எடுத்து வந்த வியாபாரி ஒருவரை இன்று (02) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் கொழும்பு பகுதியை சேர்ந்த 40 வயதுடைய வியாபாரி ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை 4.50 மணியளவில் டுபாய் நாட்டிலிருந்து வந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 226 விமானத்தில் குறிப்பிட்ட நபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நபரின் வயிற்றுப்பகுதியில் மறைத்து கொண்டு வரப்பட்ட தங்க பிஸ்கட்களே இவ்வாறு சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த நபரிடம் இருந்து 1 கிலோ 160 கிராம் எடை கொண்ட 10 தங்க பிஸ்கட்டுக்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்கள் 69,60,000 ரூபா பெறுமதியுடையவை என சுங்க ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment