களுத்துறை வடக்கு, உக்கல்பொட பகுதியில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை சட்டத்தை வலுப்படுத்தும் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 14 கிலோகிராம் கேரள கஞ்சாவும் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியொன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
களுத்துறை மற்றும் வாத்துவ பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment