2006 ம் ஆண்டு அந்நூர் தேசிய பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் கல்வி கற்ற மாணவர்கள் சுமார் 12 வருடங்களுக்குப் பின்னர் நேற்றைய தினம் 03.06.2018ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை 4ம் வட்டாரத்திலுள்ள பழைய மாணவர் சங்க உறுப்பினர் எம்.எம்.றிபான் இல்லத்தில் இப்தார் நிகழ்வோடு ஒன்று கூடினர்.
இந்நிகழ்வில், பழைய மாணவர்கள் சுமார் 30ற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன், நிகழ்வைச் சிறப்பிக்குமுகமாக பாடசாலையின் முன்னாள் அதிபர் யூ.அகமட் அவர்களும் தற்போதைய அதிபர் எச்.எம்.தாஹிர், ஆசிரியர் எல்.ரீ.எம்.சாதீக்கீன் அதிபர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இப்தார் முடிவடைந்த பிறகு நிகழ்வை பழைய மாணவர் சங்க உறுப்பினர் எச்.எம்.றிஸ்வான் (நளிமி) கிராஅத்துடன் நிகழ்வை ஆரம்பித்தார்.
அதனைத்தொடர்ந்து நிருவாகத்தெரிவு இடம்பெற்றது.
செயலாளர்
கே.எல்.எம்.ஹம்ஸீர்
தலைவர்
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
பொருளாளர்
எம்.எம்.றிபான்
பிரதித்தலைவர்
ஏ.ஜி.அஸ்லம்
உப செயலாளர்
எம்.எச்.எம்.இம்ரான்
உறுப்பினர்கள்
ஏ.எம்.அஸ்லம்
ஏ.எல்.எம்.இர்சாத்
எம்.எம்.றிப்கான்
எச்.எம்.றிஸ்வான் (நளிமி)
எம்.பைரூஸ்
எம்.மெளலவி
எம்.நபீல்
நிருவாகத் தெரிவைத் தொடர்ந்து பாடசாலை அதிபர் எச் எம்.தாஹிர் உரையாற்றினார், அவர் தனதுரையில், பழைய மாணவர் சங்கத்தின் தேவைப்பாடுகள், பாடசாலையின் வளர்ச்சியில் நாம் ஆற்ற வேண்டிய பங்களிப்புகள் என்பவற்றை எடுத்துரைத்ததுடன், 12 வருடங்களுக்குப் பிறகும் வெவ்வேறு திசைகளில் பயணித்த நீங்கள் ஒன்று சேர்ந்து இச்சமூகத்திற்கு தொண்டாற்ற முனைந்திருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும் எனத்தெரிவித்தார்.
பாடசாலையின் முன்னாள் அதிபர் யூ.அகமட் உரையாற்றுகையில், தான் அதிபராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் 2006 சாதாரண தர மாணவர்களாகிய நீங்கள் பாடசாலையில் பல்வேறு திறன்பட வேலைகளைச் செய்துள்ளீர்கள். அக்காலப்பகுதியில் பாடசாலையில் இடம்பெற்ற மிகப்பெரும் கண்காட்சி நிகழ்வில் தங்கள் வகுப்பினர் அதிக பங்களிப்புக்கள், ஒத்தாசைகளை வழங்கியிருந்ததை என்னால் இன்னும் மறக்க முடியாதுள்ளது எனத்தெரிவித்தார்.
அத்தோடு, எமது பாடசாலையின் வரலாற்று ஆவணமாக ஒரு புத்தகத்தையும் வெளியிட தற்போதைய பாடசாலை நிருவாகம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும், பதுரியா நகர் அல்-மினா வித்தியாலயத்தின் அதிபர் எல்.ரீ.எம். சாதிக்கீன் அவர்களும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், அதிதிகளின் உரையுடனும் செயலாளரின் நன்றியுரையுடனும் நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றது.
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்,
வாழைச்சேனை
No comments:
Post a Comment