தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 3, 2018

தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தம்

தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் இன்று (04) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இதேவேளை, ஹட்டன் தபால் திணைக்கள உத்தியோகத்தர்களும் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 
5 வருடங்களாக நீடித்து வரும் அஞ்சல் சேவை தரம் 11 இற்கான நியமனங்களை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 
இப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் மலையகத்தில் உள்ள தபால் திணைக்கள உத்தியோகத்தர்களும் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்டைந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

இராமச்சந்திரன்

No comments:

Post a Comment