பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸிடமிருந்து பணம் பெற்ற சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, இன்று (11) காலை அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான, அர்ஜுன் அலோசியஸிடமிருந்து பணம் பெற்றதாக, கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்தநிலையில், இது குறித்து பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த தயாசிறி ஜயசேகர, தேர்தல் நடவடிக்கைகளுக்காக தாம் ரூபா 10 இலட்சத்தை பெற்றதாக தெரிவித்திருந்ததோடு, இவ்வாறு மேலும் பலரும் நிதி பெற்றதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment