ஓட்டமாவடி தாருல் ரஹ்மத் விஷேட தேவையுடையோர் பாடசாலைக்கு நிதி திரட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட சந்திப்பும் கலந்துரையாடலும் நேற்றுமுன்தினம் 09.06.2018ம் திகதி சனிக்கிழமை கட்டாரிலுள்ள Stafford இலங்கை பாடசாலையில் மாலை 05:30 மணிக்கு இடம்பெற்றது.
இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் (AFICO- QATAR) தலைவர் KLM.அசனார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடல் சந்திப்பில் வரவேற்புரையினை AFICO வின் செயலாளர் MNM.றம்ஸின் நிகழ்த்தியதோடு, AFICO வின் தலைவர் KLM.அசனார் தலைமையுரையினை நிகழ்த்தினார்.
AFICO வின் தலைவர் KLM.அசனார் தலைமையுரையில் அமைப்பின் உருவாக்கம் அதன் நோக்கம் மற்றும் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பில் இரத்தினச்சுருக்கமாக எடுத்துரைத்தார்.
அத்துடன், ஓட்டமாவடி தாருல் ரஹ்மத் விஷேட தேவையுடையோர் பாடசாலை, அதன் உருவாக்கம், இன்றைய நிலையில் தேவைப்பாடுகள் தொடர்பிலான ஆவணக்காணொளி ஒளிபரப்பப்பட்டது.
மேற்படி நிகழ்வுகளைத் தொடர்ந்து, இப்தார் நிகழ்வு இடம்பெற்றதுடன், அதனைத்தொடர்ந்து SLDC யின் தஃவா பிரிவுப்பொறுப்பாளர் அஷ்ஷெய்க் ACK.முஹம்மது ரஹ்மானி அவர்களின் “வாழ்வளிக்கும் மாதம் ரமழான்” எனும் தலைப்பிலான விஷேட சொற்பொழிவும் இடம்பெற்றது.
அவர் விஷேட தேவையுடையோர் தொடர்பில் இஸ்லாமிய மார்க்கம் வழங்கும் முன்னுரிமை, அவ்வாறான விஷேட தேவையுடையோருக்கு நாம் செய்ய வேண்டிய உதவிகள் தொடர்பில் சுருக்கமாக எடுத்துரைத்தார்.
நிகழ்வின் இறுதியில் கலந்து கொண்ட சகோதரர்கள் சிலரால் ஓட்டமாவடி தாருல் ரஹ்மத் விஷேட தேவையுடையோர் பாடசாலைக்கென குறிப்பிட்ட தொகைப்பணம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், விஷேட அழைப்பின் பேரில் SLDC நிருவாகிகள் கலந்து கொண்டதுடன், ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளை, அந்நூர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளை, ஹெம்மாதகம நலன்புரி அமைப்பு ஆகியவற்றின் நிருவாகிகளும், அங்கத்தவர்களும் மற்றும் கட்டாரிலுள்ள இலங்கையைச் சேர்ந்த சகோதரர்களும் பரவலாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஓட்டமாவடி தாருல் ரஹ்மத் விஷேட தேவையுடையோர் பாடசாலைக்காக நிதி சேகரிப்பு தொடர்பில் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடலும் சந்திப்பும் வெற்றிகரமாக இடம்பெற்றதுடன், இந்நிகழ்வில் கலந்து கொண்ட சகோதரர்களும் அழைப்பு விடுத்தும் தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்து கொள்ள முடியாமல் போன சகோதர்களும் எமது முன்னெடுப்புக்களுக்கு தொடர்ந்தும் நிதி மற்றும் ஏனைய ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென Afico qatar அமைப்பினர் எதிர்பார்க்கின்றனர்.
இறுதியாக நன்றியுரையினை அமைப்பின் செயலாளர் MNM. றம்ஸின் நிகழ்த்தியதோடு இனிதே இந் நிகழ்வு நிறைவு பெற்றது.
MNM.றம்ஸின்







No comments:
Post a Comment