அரசாங்கத்துக்கு நான்கு கோடி ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட பிரதிவாதிகள் மூன்று பேருக்கு எதிராக இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த அரசாங்கத்தில் சதொச நிறுவனத்தின் ஊழியர்கள் 153 பேரை அவர்களின் உத்தியோகபூர்வ பணியில் இருந்து விடுவித்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமை ஊடாக இந்த நட்டம் ஏற்பட்டிருப்பதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வழக்கு இன்று (31) கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் விசாரிக்கப்பட்டதுடன், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன் வைக்கப்பட்ட குற்றப்பத்திரிகை திறந்த நீதிமன்றில் வாசிக்கப்பட்டது. பின்னர் வழக்கை ஆகஸ்ட் 28 ம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 2010ல் இருந்து 2014ம் ஆண்டு காலத்தில் சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தியதால் நான்கு கோடி ரூபாவுக்கும் அதிக நட்டம் அரசிற்கு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்து முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச முன்னாள் தலைவர் ராஜ் பெர்னாண்டோ மற்றும் நிறுவனத்தின் முன்னாள் முகாமையாளர் மொஹிதீன் சாகிர் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment