கொரிய நாட்டு, குலோன் குலோபல் கோப்பரெஷன் நிறுவனத்தின் தலைவர் சாங் வுன் யூன் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் சினேகபூர்வ சந்திப்பொன்று நேற்று (30) மாலை அமைச்சில் இடம்பெற்றது.
கொலோன் குளோபல் நிறுவனம் 2001ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவகற்றல் திட்டங்கள் பலவற்றை மேற்கொண்டு வருகிறது.
காலி மற்றும் ஹம்பாந்தோட்டை நீர் வழங்கல் திட்டங்கள் இந்நிறுவனத்தின் மூலம் நிறைவுபெற்றுள்ளதோடு, மாத்தறை நீர் வழங்கல் திட்டத்தின் (4ஆம் கட்டம்) தெதுரு ஓயா மற்றும் கொழும்பு நீர் வழங்கல் திட்டம், மற்றும் கண்டி பாரிய கழிவு நீர் முகாமைத்துவ திட்டங்கள் போன்றவற்றை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சின் செயலாளர் டீ.ஜி.எம்.வீ. அப்புஆரச்சி, திட்டமிடல் பணிப்பாளர் நபீல் மற்றும் எல். மங்கலிகா, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லாஹ் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment