12 வயது சிறுமியை தொடர்ச்சியாக வல்லுறவு செய்து வந்த முதியவர் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, May 31, 2018

12 வயது சிறுமியை தொடர்ச்சியாக வல்லுறவு செய்து வந்த முதியவர் கைது

12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை தொடர்பில் இன்று முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

முறிகண்டி பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் சிறுமி ஒருவரை தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 65 வயது நிரம்பிய முதியவரே இவ்வாறு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தமையை அவதானித்த அருகில் உள்ள வர்த்தகர்கள் நேற்றைய தினம் வீடியோ ஆதாரத்துடன் வழங்கிய தகவலை அடுத்து குறித்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் பிரதேச வர்த்தகர்களால் கிராம சேவையாளர் ஊடாக பிரதேச செயலருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து பொலிசார் கைது செய்துள்ளனர். 

சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமி வறிய குடும்பத்தை சேர்ந்தவர் எனவும், வறுமையை சாதகமாக பயன்படுத்தி குறித்த சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளது எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 

கிளிநொச்சி நிபோஜன்

No comments:

Post a Comment