பியகம மற்றும் கடுவலை நகரங்களை இணைக்கும் கடுவலை பாலம் இன்றிரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.
பலத்த மழை காரணமாக குறித்த பாலம் சேதமடைந்துள்ளது. எனவே, அதனை புனரமைக்கும் பணிகளுக்காக பாலம் மூடப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டது.
No comments:
Post a Comment