தெற்காசியாவின் வறுமை மட்டம் குறைந்த நாடு இலங்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, May 31, 2018

தெற்காசியாவின் வறுமை மட்டம் குறைந்த நாடு இலங்கை

தெற்காசியாவின் வறுமை மட்டம் குறைந்த நாடு இலங்கையாகும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செயலமர்வு ஒன்றில் அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றினார்.

2012ஆம் ஆண்டில் ஆறு தசம் 7 சதவீதமாகக் காணப்பட்ட வறுமை மட்டம் தற்சமயம் நான்கு தசம் 4 சதவீதம் வரை குறைவடைந்திருக்கின்றது. நிலைபெறானா அபிவிருத்தி இலக்கின் கீழ் 2030ஆம் ஆண்டளவில் நாட்டில் இருந்து வறுமையை முற்றாக ஒழிப்பது அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் அவர் கூறினார். 

சமுர்த்தி வேலைத்திட்டத்தினால் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை அடைந்துள்ள கொள்ள முடியவில்லை. வறுமை அரசியல் வாதிகளின் ஆயுதமாக மாறியிருக்கின்றமை இதற்கான காரணமாகும். சமுர்த்தி அலுவலகம் அரசியல் வாதிகளின் அலுவலமாக மாறியிருக்கின்றது. 

சமுர்த்தி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை சீர்குலைவதற்கும் இது காரணமாக அமைந்துள்ளதாகவும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment