சில உள்ளூராட்சி சபைகளுக்கு மலக்கழிவு அகற்றும் பவுசர் விநியோகிக்கும் நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் இன்று (24) அமைச்சில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச சபை, முல்லைத்தீவு பிரதேச சபை, மொனராகலை பிரதேச சபை மற்றும் தலவாக்கலை நகர சபை ஆகியவற்றுக்கு இந்த பவுசர்கள் வழங்கப்பட்டன.
அந்தப் பிரதேசங்களில் முழுமையான மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கு முன்னோடி நடவடிக்கையாக உலக வங்கியின் செயல்திட்டத்தின் கீழ் பிரஸ்தாப உள்ளுராட்சி சபைகளுக்கு இந்த வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நிலத்தடி நீர் மாசடைவதை தடுக்க முடியும்.
No comments:
Post a Comment