சம்மாந்துறை வைத்தியசாலைக்கு பிரதி அமைச்சர் பைசால் காசீம் ஏற்பாட்டில் சத்திர சிகிச்சைக்கூட மேசை - News View

About Us

About Us

Breaking

Thursday, May 24, 2018

சம்மாந்துறை வைத்தியசாலைக்கு பிரதி அமைச்சர் பைசால் காசீம் ஏற்பாட்டில் சத்திர சிகிச்சைக்கூட மேசை

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு 27 லட்சம் ரூபா பெறுமதியான சத்திர சிகிச்சைக்கூட மேசை ஒன்று சுகாதார அமைச்சின் உயிரியல் மருத்துவ பொறியியல் சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை அபிவிருத்திக் குழு மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் சம்மாந்துறை சூறா சபை என்பன விடுத்த வேண்டுகோளின்பேரில் பிரதி அமைச்சர் பைசால் காசீம் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.

அதேவேளை இவ்வைத்தியசாலைக்கு அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் பயன்படுத்தக்கூடியதும் மின்சாரத்தில் இயங்கக்கூடியதுமான முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்து தன்னியக்க கட்டில்கள் பிரதியமைச்சரினால் அண்மையில் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இவ்வைத்தியசாலையில் 60 ஆயிரம் சதுர அடி பரப்புள்ள நான்கு மாடிகளைக் கொண்ட கட்டிடத் தொகுதி ஒன்றை வெளிநாட்டு நிதியுதவியுடன் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த மாத இறுதிப்பகுதியில் அடிக்கல் நடப்படும் எனவும் பிரதி அமைச்சர் பைசால் காசீம் தெரிவித்தார்.

இதேவேளை இவ்வைத்தியசாலைக்கு 04 மாடி கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

No comments:

Post a Comment