சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக களனி கங்கை பெருக்கெடுத்ததினால் களனி பெத்தியாகொட நீர்பாசன பகுதிக்குட்பட்ட இடங்களில் சட்ட விரோதமாக குடியிருந்தவரகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தற்காலிக கூடாரங்களை அமைத்து தங்கியிருந்தனர். இந்த பகுதிக்கு விஜயம் செய்த நீர்பாசனம் நீர்வளங்கள் முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் அமைச்சர் துமிந்த திசாநாயக்க இந்த மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தினார்.
சட்ட விரோதமாக குடியிருந்த 15 குடும்பங்களை மாத்திரம் இங்கிருந்து விரைவாக வெளியேற்றி பெத்தியாகொட பகுதியில் இவர்களுக்கான தற்காலிக இருப்பிடங்களை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
இந்த மக்களுடன் உரையாடிய அமைச்சர், சட்ட குடியிருப்பாளர்களாக இருந்த போதிலும் இவர்களுக்கு அரசாங்கத்தினால் அனர்த்தத்திற்கு உள்ளான மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பு நகரில் இவர்களுக்கான மாற்று குடியிருப்புக்கான காணியை பெற்றுக்கொடுப்பது சிரமம் ஆகும் என்றும் அடையாளம் காணப்பட்ட பகுதியில் இவர்களுக்கான காணியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிக்ளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
அமைச்சின் பிரதியோக செயலாளர் மற்றும் களனி பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment