ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை மகாவலி 'ரன் தியவர' உறுதி வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
உணவு பாதுகாப்புடன் கூடிய சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்பை மேற்கொண்டு வரும் இலங்கை விவசாய சமூகத்தினர் பெருமையுடன் எழுந்திருக்கக்கூடிய எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் தமது விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு காணிகளுக்கான உறுதிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்தை மேலும் சாத்தியப்படுத்தும் வகையில் மகாவலி பி சீ மற்றும் ரம்புக்கன்ஓய வலயத்தின் 12 000 காணி உறுதிகளை வழங்கும் 'ரன் தியவர' காணி உறுதி வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நாளை (01) முற்பகல் 10.00 மணிக்கு அரலகங்வில மகுல்தமன மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது..
நாடெங்கிலும் 10 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தில் மகாவலி வலயத்தில் உள்ள விவசாய சமூகத்தினருக்கு ஒரு இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
மகாவலி விவசாய சமூகத்தினர் நீண்டகாலமாக முகம்கொடுத்து வந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் விசேட பணிப்புரையின்பேரில் இந்த நிகழ்ச்சித்திட்டம் 2016ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதுவரையில் இந்த இலக்கை அடைந்துகொள்ளும் வகையில் மகாவலி வலயத்தில் மட்டும் ஒரு இலட்சம் காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதே நேரம் 2018ஆம் ஆண்டில் மட்டும் அனுமதிப்பத்திரம் வழங்க நீண்டகால குத்தகையின் கீழ் மேலும் 40 ஆயிரம் காணி உறுதிகளை திட்டமிடப்பட்டுள்ளது.
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின் தகவல்களுக்கேற்ப கடந்த 2017ஆம் ஆண்டு மகாவலி பி சீ மற்றும் எச் வலயங்களிலும் மொரகஹகந்த விக்டோரியா ஹூறுளுவெவ மற்றும் வளவ ஆகிய குடியேற்றவாசிகளுக்காக இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் நிலையான காணி உரிமை இல்லாத பாடசாலைகள்இ வைத்தியசாலைகள்இ பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட 12573 அரச நிறுவனங்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
நாளைய தினம் மகாவலி பி சீ ரம்புக்கன்ஓய வலயத்தின் 22 பௌத்த விகாரைகளுக்கான உறுதிகளும் 50 அரச நிறுவனங்களுக்கான காணி உறுதிகள் வழங்குதல் உள்ளிட்ட 12 000 காணி உறுதிகள் வழங்கப்பட உள்ளன.
No comments:
Post a Comment