வட மாகாண அரச வைத்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மேலதிக நேர கொடுப்பணவுகள் இவ்வாரத்துக்குள் வழங்கப்படும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 23, 2018

வட மாகாண அரச வைத்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மேலதிக நேர கொடுப்பணவுகள் இவ்வாரத்துக்குள் வழங்கப்படும்

வட மாகணத்தில் கடமையாற்றுகின்ற அரச வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பணவுகள் பல மாதங்களாக வழங்கப்படாது நிலுவையில் காணப்பட்ட நிலையில், நிலுவையில் உள்ள மேலதிக நேரக்கொடுப்பணவை இவ் வாரத்துக்குள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் உள்ள அரச வைத்தியர்களுக்கான மேலதிக நேரக்கொடுப்பணவுகள் நீண்ட காலமாக வழங்கப்படாத நிலையில் நிலுவையில் காணப்பட்டது.

குறித்த பிரச்சினை தொடர்பாக வடமாகாண சுகதார அமைச்சு மத்திய அரசுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. எனினும் மேலதிக நேர கொடுப்பணவுகள் வழங்கப்படாத நிலை காணப்பட்டது.

இந்த நிலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் அடையாள பணிப்பகிஸ்கரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டு பணிப்பகிஸ்கரிப்பும் இடம் பெற்றது.

எனினும் மத்திய அரசாங்கத்திடம் இருந்து இதற்கான நிதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதும் உரிய காலத்தில் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது மத்திய அரசாங்கத்தின் திறைசேரியில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் மாகாண திறைசேரிக்கு நிதி வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக மாகாண திறைசேரியில் இருந்து குறிப்பிட்ட காலத்துக்குறிய நிலுவைகளை இந்த வாரத்துக்குள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே மாகாண திறைசேரியில் இருந்து இவ்வாரத்துக்குள் வைத்தியர்களுக்கான நிலுவையில் உள்ள மேலதிக நேர கொடுப்பணவுகள் வழங்கப்படும்.

குறிப்பிட்ட காலத்திற்குள் மத்திய திறைசேரியினால் மாகாண திறைசேரிக்கு குறித்த பணம் வழங்கப்படும் என உறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment