காத்தான்குடி ஹைறாத் பள்ளிவாயலுக்கான ஸகாத் உதவிகள் இடை நிறுத்தம் - சம்மேளனம் அனுப்பிய பேரீச்சம்பழங்களை திருப்பியனுப்பியது ஹைறாத் பள்ளிவாயல் நிருவாகம் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 31, 2018

காத்தான்குடி ஹைறாத் பள்ளிவாயலுக்கான ஸகாத் உதவிகள் இடை நிறுத்தம் - சம்மேளனம் அனுப்பிய பேரீச்சம்பழங்களை திருப்பியனுப்பியது ஹைறாத் பள்ளிவாயல் நிருவாகம்

காத்தான்குடி 6ம் குறிச்சி ஹைறாத் பள்ளிவாயலுக்கான ஸகாத் கொடுப்பனவு இடை நிறுத்தப்பட்டதையடுத்து அப்பள்ளிவாயலுக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் வழங்கப்பட்ட பேரீச்சம்பழங்களை பெற்றுக் கொள்ளாது பள்ளிவாயல் நிருவாகம் சம்மேளனத்திற்கு திருப்பியனுப்பியுள்ளது.

இது தொடர்பாக காத்தான்குடி ஹைறாத் பள்ளிவாயலின் செயலாளரும் மண்முனைப் பற்று பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஐ.முகம்மட் நஸீம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் காத்தான்கு பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் எமது பள்ளிவாயல் அங்கத்துவ நிறுவனமாக இருந்து வருகின்றது.

சம்மேளனத்தின் ஸகாத் திட்டத்தில் எமது பள்ளிவாயலும் உள் வாங்கப்பட்டு கடந்த பல வருடங்களாக சம்மேளன கூட்டு ஸகாத் உதவி எமது பள்ளிவாயல் ஊடாக மஹல்லா பகுதி மக்களுக்கு கிடைக்கெப்பெற்று வந்தது.

நாங்களும் பள்ளிவாயலினால் சம்மேளன ஸகாத் திட்டத்திற்கு ஸகாத் நிதிகளை எமது பகுதியிலும் முடியுமானளவு சேகரித்து வழங்கி வந்தோம். எமது பள்ளிவாயல் மஹல்லாவில் 535 குடும்பங்ளைச் சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இவ்வாண்டு சம்மேளன ஸகாத் திட்டத்திற்கு எமது பள்ளிவாயலினூடாக விண்ணப்பித்தவர்கள் பரீசிலிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஸகாத் உதவிகள் வழங்கப்பட வில்லை.

இவ்வாண்டு ஏனைய பள்ளிவாயல்களுக்கு ஸகாத் உதவிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் எமது பள்ளிவாயல் பகுதி மக்களுக்கு மாத்திரம் வழங்கப்படாதது குறித்து நாம் சம்மேளனத்தின் முக்கியஸ்தர்கள் பைத்துஸ் ஸகாத் திட்டத்தின் நிருவாகிகளை அனுகி நாங்கள் கேட்ட போது எமது பள்ளிவாயலுக்கு ஸகாத் வழங்குவதை ஏனைய பள்ளிவாயல் நிருவாகிகள் விரும்ப வில்லை எனவும் எமது பள்ளிவாயல் அப்துல் ஜவாத் ஆலீம் நம்பிக்கை நிதியத்தில் அங்கத்துவமாக இருப்பதாலும் எமது ஹைறாத் பள்ளிவாயலுக்க ஸகாத் வழங்கமுடியாதுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

எனினும் எமது பள்ளிவாயல் பகுதியில் ஸகாத் பெற தகுதியானவர்களுக்கு அப்பகுதியிலுள்ள ஏனைய பள்ளிவாயலின் ஊடாக ஸகாத் உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்கள்.

எமது பள்ளிவாயல் மஹல்லாபகுதியிலுள்ள மக்கள் மிகவும் வறிய குடும்பங்கள் உண்மையில் சம்மேளன ஸகாத் திட்டத்திற்கும் அதனைப் பெற தகுதியானவர்களும் எமது பள்ளிவாயல் பகுதியிலேயே உள்ளனர்.

இவர்களின் சம்மேளன ஸகாத் உதவித் திட்டம் இடை நிறுத்தப்பட்டதன் மூலம் வறிய குடும்பங்களும் வறிய மக்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். இதனாலேயே நாங்கள் பள்ளிவாயல் சம்மேளனம் அனுப்பிய பேரீச்சம் பழங்களை திருப்பியனுப்பினோம்.

இவர்கள் எமக்கு வழங்கிய ஸகாத் உதவிகளை இடை நிறுத்தியதால் எம்மை வேனுமென்று கழித்துள்ளார்கள் என தெரிவித்தார்.

இது தொடர்பாக சம்மேளனத்தின் தற்போதைய செயலாளர் அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம்.ஸபீல் நழீமியிடம் கேட்ட போது காத்தான்குடி ஹைறாத் பள்ளிவாயலுக்கு ஸகாத் உதவிகளை வழங்குவதை ஏனைய பள்ளிவாயல்கள் விரும்ப வில்லை. அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அத்தோடு ஹைறாத்; பள்ளிவாயல் அப்துல் ஜவாத் ஆலீம் நம்பிக்கை நிதியத்தில் ஒரு அங்கத்துவ நிறுவனமாக உள்ளது.

இவைகளை கருத்திற் கொண்டு சம்மேளன பைத்துஸ் ஸகாத் திட்டத்திலுள்ள உலமாக்கள் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையிடம் இதற்கான மார்க்க ரீதியான பத்வாவை கேட்டுள்ளார்கள். அதுவரை சம்மேளன பைத்துஸ் ஸகாத் திட்டத்தின் மூலம் இப்பள்ளிவாயலுக்கு வழங்கப்படும் ஸகாத் உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

பேரீச்சம் பழங்கள் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டதாகும். எமக்கு திணைக்களம் வழங்கிய பேரீச்சம் பழங்களை நாங்கள் அனுப்பி வைத்தோம் என தெரிவித்தார்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment