காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் புதிய தலைவராக மௌலவி. ஆதம்லெவ்வை - News View

About Us

About Us

Breaking

Thursday, May 31, 2018

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் புதிய தலைவராக மௌலவி. ஆதம்லெவ்வை

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் புதிய தலைவராக மௌலவி எம்.ஐ.ஆதம்லெவ்வை நியமிக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளுக்கான பொதுச் சபைக் கூட்டம் 29.5.2018 செவ்வாய்க்கிழமையன்று இடம் பெற்ற போது அங்கு இடம் பெற்ற தலைவர் தெரிவில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதனால் தலைவர் தெரிவு பிற்போடப்பட்டு அதற்கான பொறுப்பை காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலிடம் வழங்கப்பட்டிருந்தது.

காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆப்பள்ளிவாயல் அதன் தலைவரான மௌலவி எம்.ஐ.ஆதம்லெவ்வை பலாஹி அவர்களை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவராக நியமிப்பதென தீர்மானித்தது. 

இதனடிப்படையில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளுக்கான புதிய தலைவராக மௌலவி ஏ.எல்.ஆதம்லெவ்வை நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி மௌலவி ஆதம்லெவ்வை ஒய்வு பட்டதாரி ஆசிரியரவார்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் பதவியென்பது சுழற்சி முறையில் காத்தான்குடியிலுள்ள பிரதான மூன்று ஜும்ஆப்பள்ளிவாயல்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இம்முறை காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலுக்கு அந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டு தலைவர் பதவிக்கு மேற்படி மௌலவி ஆதம்லெவ்வையை பள்ளிவாயல் நிருவாகம் சிபாரிசு செய்துள்ளது.

சம்மேளனத்தின் புதிய செயலாளர் மற்றும் பொருளாளர் பிரதி தலைவர், உப தலைவர்கள், உப செயலாளர்கள் மற்றும் கணக்காளர் ஆகியோர் கடந்த 29ம் திகதி நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment