தென் மாகாணத்தில் சிறார்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாவது அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 24, 2018

தென் மாகாணத்தில் சிறார்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாவது அதிகரிப்பு

தென் மாகாணத்தில் சிறார்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றுக்குள்ளான 350 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜயசூரிய குறிப்பிட்டார்.

சுமார் 800 பேர் சிகிச்சைகளைப் பெற்று வைத்தியசாலைகளிலிருந்து வௌியேறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

வைரஸ் தொற்றுக்குள்ளான சிறார்கள் 8 மணித்தியாலங்களுக்கு மேல் ஓய்வெடுக்க வேண்டும் எனவும் தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜயசூரிய தெரிவித்தார்.

No comments:

Post a Comment