பாகிஸ்தான் உள்நாட்டமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு - காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Sunday, May 6, 2018

பாகிஸ்தான் உள்நாட்டமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு - காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி

கொலை முயற்சியில் இருந்து இன்று உயிர் தப்பிய பாகிஸ்தான் உள்நாட்டமைச்சர் அஹ்சன் இக்பால் துப்பாக்கிச் சூடு காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பாகிஸ்தான் நாட்டு உள்நாட்டமைச்சராக பதவி வகிப்பவர் அஹ்சன் இக்பால் (59). ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியை சேர்ந்த இவர், இன்று பஞ்சாப் மாகாணம், நாரோவால் மாவட்டத்துக்குட்பட்ட கஞ்ச்ரூர் பகுதியில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்டார். 

அப்போது, ஒரு வாலிபர் அவரை நோக்கு துப்பாக்கியால் சுட்டார். குறிதவறி பாய்ந்த துப்பாக்கி தோட்டா அஹ்சன் இக்பாலின் வலது கை தோள்பட்டயை பதம் பார்த்தது. இச்சம்பவம் தொடர்பாக ஒரு வாலிபரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், காயமடைந்த அஹ்சன் இக்பால் நாரோவால் மாவட்ட அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

No comments:

Post a Comment