மாண்புமிகு ரணசிங்க பிரேமதாச அவர்களின், தனக்கென சொந்தமான ஒரு விட்டில் வாழ்வதற்கான உரிமையினை பெற்றுக் கொடுக்கும் உன்னதமான "உதாகம எண்ணக்கருவினை" அர்தமூட்டும் வகையில்.
கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் செயலாட்சி மற்றும் வழிகாட்டலின் கீழ். வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களின்
2025 ஆம் வருடத்தில் "செமட்ட செவண" யாவருக்கும் வீடு வழங்கும் ஒரே நோக்கத்துக்கமைய. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் "செமட்ட செவண" தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ்.
ஐக்கிய தேசியக் கட்சி சேருவிலை தொகுதி முதன்மை அமைப்பாளர் முன்னால் மாகாண சபை உறுப்பினர் டாக்டர் அருண சிறிசேன அவர்களின் விசேட பங்களிப்புடன்.
கௌரவ பாராளமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், கௌரவ பாராளமன்ற உறுப்பினர் அப்துள்ள மஹ்ரூப், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் சாந்த, சேருவில பிரதேச சபை தவிசாளர் ரணசிங்க, பிரதேச சபை உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள், பொது மக்கள் உட்பட கலந்து கொண்டனர்.
திருகோணமலை மாவட்டத்தில் கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவில் கல்யாணபுரவில் 100 நாள் துரித தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட "பொகுணுகம"மாதிரி கிராமம் விஷேட அதிதிகளின் பங்குபற்றலுடன் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களின் திருக்கரங்களினால் மே மாதம் (4)ம் திகதி வெள்ளிக்கிழமை மக்களிடம் கையளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment