அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் மொகம்மதிய நகர், அபுரார் நகர், மாதிரிகிராமங்கள் இக்பால் நகர் மக்களிடம் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, May 6, 2018

அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் மொகம்மதிய நகர், அபுரார் நகர், மாதிரிகிராமங்கள் இக்பால் நகர் மக்களிடம் கையளிப்பு

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் அனைவருக்கும் வீடு எனும் திட்டத்தில் மூதூர் பிரதேச பிரிவில் பாலத்தோப்பு இக்பால் நகரில், மொகம்மதிய நகர், அபுரார் நகர், மாதிரி கிராமங்கள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு (5) திகதி காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினர் துரைசிங்கம், முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் Dr. அருண சிறிசேன, வீடமைப்பு அதிகார சபையின் உயர் அதிகாரிகள், சேருவில, மூதூர் பிரதேச செயலக அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர் .

No comments:

Post a Comment