மட்டக்களப்பு மாநகரத்தில் இடம்பெற்றுவரும் டெங்கு ஒழிப்பு செயற்திட்ட புகைமருந்து அடிக்கும் செயற்பாட்டில் மாநகர சபை உறுப்பினர்களையும் உள்வாங்கியதான நடைமுறை தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவான் பாராட்டப்பட்டார்
ஜனாதிபதியின் செயலாளார் தலைமையில் அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற மாநகர முதல்வர்கள், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், உள்ளுராட்சி ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், மாநகர ஆணையாளர்கள் ஆகியோருடனான கலந்துரையாடலின் போதே இப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு புகைமருந்து அடிக்கும் செயற்திட்டத்தில் ஒவ்வொரு வட்டார மாநகர சபை உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து அவார்களின் கண்காணிப்பு மற்றும் அவர்களின் பங்குபற்றுதலுடன் அதனை மேற்கொள்வது தொடர்பிலான நடைமுறை மட்டக்களப்பு மாநகர சபை முதல்வரால் மேற்கொள்ளப்பட்டது.
இந்நடைமுறை வரவேற்கத்தக்கதும், ஆக்கபூர்வமானதுமான விடயம் எனவவும் அதனை நடைமுறைப்படுத்தும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் பாராட்டுக்குரியவர் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இந்நடைமுறையினை நாட்டின் அனைத்து சபைகளும் மேற்கொள்ளுமிடத்து வினைத்திறன் மிக்கதாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment