வங்காளதேசத்தில் ரோகிங்கியா அகதிகளுடன் பிரியங்கா சோப்ரா சந்திப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 24, 2018

வங்காளதேசத்தில் ரோகிங்கியா அகதிகளுடன் பிரியங்கா சோப்ரா சந்திப்பு

ரோகிங்கியா அகதிகளின் துயரங்களை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் யுனிசெப் தூதரான பிரியங்கா சோப்ரா இன்று வங்கதேசத்தில் உள்ள அகதிகளை சந்தித்தார். 

நடிகையும் யுனிசெப் நல்லெண்ண தூதருமான பிரியங்கா சோப்ரா, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மியான்மரில் இருந்து வந்துள்ள ரோகிங்கியா அகதிகள் தங்கியிருக்கும் காக்ஸ் பஜார் முகாம்களுக்கு பிரியங்கா சோப்ரா இன்று சென்று அகதிகளை சந்தித்து கலந்துரையாடினார். 

பின்னர் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து பேசினார். அப்போது மிகப்பெரிய மனிதநேய உதவிகளை செய்து வரும் வங்காளதேச அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது ‘வங்காளதேசத்திடம் இருந்து உலக நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டும்’ என பிரியங்கா சோப்ரா கூறியதாக பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

குறிப்பாக, கட்டாயத்தின்பேரில் இடம்பெயர்ந்து வந்துள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான மியான்மர் சிறுபான்மை இன மக்களின் சுமையை ஏற்றுள்ள ஹசீனாவை பிரியங்கா சோப்ரா வெகுவாகப் பாராட்டியதாக பிரதமரின் ஊடகப்பிரிவு கூடுதல் செயலாளர் தெரிவித்தார்.

ரோகிங்கியா முகாம்களுக்கு பிரியங்கா சோப்ரா சென்று அகதிகளுடன் கலந்துரையாடுவது இது இரண்டாவது முறையாகும்.

No comments:

Post a Comment