வவுனியா பாவற்குளம் கணேஸ்வரா வித்தியாலய பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் இன்று கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா பாவற்குளம் கணேஸ்வரா வித்தியாலயத்தில் கடமையாற்றிய அதிபர் கடந்த டிசம்பர் மாதத்துடன் இடமாற்றம் பெற்று சென்றிருந்தார். அதன் பின்னர் கடந்த ஐந்து மாதங்களாக இப்பாடசாலை அதிபர் இன்றியே இயங்கி வந்திருந்தது.
அத்தோடு பாடசாலை அதிபர் இன்றியே மெய்வல்லுனர் போட்டியும் நடைபெற்றிருந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளரிடம் இப்பாடசாலைக்கான அதிபர். இன்மை பற்றி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய வெகு விரைவில் இப்பாடசாலைக்கு அதிபரினை நியமிப்பதாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இருந்த போதும் இதுவரை இப்பாடசாலைக்கான அதிபரினை நியமிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழையையும் பராமல் பெற்றொர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து பாடசாலையினை மூடி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது ஆர்பாட்டகாரர்களால் பாடசாலை அதிபரினை உடன் நியமிக்க வேண்டும், அதிபர் இன்மை காரணமாக பிள்ளைகளின் கல்வி செற்பாடுகள் பாதிப்படைகின்றது போன்ற பல்வேறு சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டிருந்தனர்.
பலமணி நேரமாக நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்குள் செல்ல முடியாத நிலையேற்பட்டது.
இதன் காரணமாக ஆர்ப்பாட்டகாரர்களுடன் வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கலந்துரையாடியாடலில் ஈடுபட்டார். இதன் அடிப்படையில் ஆர்பாட்டகாரர்களால் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment