பாணந்துறையில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் பாணந்துறை பொலிஸ் உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வசம் காணப்பட்ட 15 பீப்பாய்களில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 2484750 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிங்வத்தை பகுதியை சேர்ந்த 29 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள நபரை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment