ஞானசார தேரர் குற்றவாளியாக அடையாளம் - ஜூன் 14 இல் தண்டனை - News View

About Us

About Us

Breaking

Thursday, May 24, 2018

ஞானசார தேரர் குற்றவாளியாக அடையாளம் - ஜூன் 14 இல் தண்டனை

சந்த்யா எக்னலிகொடவை திட்டி, அச்சுறுத்திய வழக்கில், பொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலபொடஅத்தே ஞானசார, குற்றவாளி என ஹோமாகம நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஹோமாகம நீதவான் நீதிமன்றில், ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், சந்த்யா எக்னலிகொடவை திட்டி, அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பான வழக்கின் அடிப்படையிலேயே அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று (24) ஹோமாகம நீதவான் நீதிமன்றில், நீதவான் உதேஷ் ரணதுங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.

அத்துடன், இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பு மற்றும் ஞானசார தேரருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை தொடர்பில் எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதவான் இதன்போது அறிவித்தார்.

கடந்த 2016 ஜனவரி 25 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவத்தின்போது, சந்த்யா எக்னலிகொடவை திட்டிய ஞானசார தேரர் தொடர்பில், எக்னலிகொட சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களால் நீதவானிடம் முறையிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், நீதிமன்றத்தை அவமதித்ததாகத் தெரிவித்து ஹோமகம நீதவான் ரங்க திஸாநாயக்க ஞானசாரவை கைது செய்வதற்கான பிடியாணையையும் வழங்கியிருந்தார்.

No comments:

Post a Comment