ஏ9 வீதியில், மீசாலை ஐயா கடைச் சந்திப் பகுதியில் இன்று (24) காலை 5.00 மணியளவில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (24) அதிகாலை ஐயா கடைச் சந்தியில் வீதியின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பருடன், கொடிகாமம் பகுதியில் இருந்து வந்த பிறிதொரு டிப்பர் பின்பக்கமாக மோதியதிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இதன் போது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனம் புரண்டு வீழ்ந்ததோடு, அதனுடன் மோதிய டிப்பர் ரயில் தண்டவாளத்திற்கு குறுக்காக மீட்க முடியாத வகையில் சிக்கியுள்ளது.
இதில், கொடிகாமம் பகுதியில் இருந்து வந்த, அதன் சாரதியான, தம்மிணைக்குளம் மடு வீதி மன்னாரைச் சேர்ந்த லோகநாதன் சர்மிலன் (27), காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து சம்பவத்தினால் புகையிரதப் பாதையில் தடை ஏற்பட்டதோடு, சுமார் இரண்டு மணித்தியால தாமதத்தை அடுத்து, புகையிரதங்கள் பயணத்தை தொடர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
சுமித்தி தங்கராசா
யாழ்ப்பாணம்
No comments:
Post a Comment