கண்டி, தெல்தெனிய - திகன உள்ளிட்ட பல பகுதிகளிலும் அண்மையில் இடம்பெற்ற கலவரங்களுடன் தொடர்புடைய CCTV காணொளிப் பதிவுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த காணொளிப் பதிவுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணொளியில் மஹாசொன் அமைப்பின் பிரதானி அமித் வீரசிங்கவும் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று நீதிமன்றிற்கு சமூகமளிக்கான அமித் வீரசிங்கவை எதிர்வரும் 10திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்டி, தெல்தெனிய – திகன உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment