ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த குழுவானது GSP + திட்டம் தொடர்பாக இலங்கையுடனான உடன்படிக்கையின் முதல் முடிவுகளை மதிப்பீடு செய்வதற்காக ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது .
தெற்காசியாவின் ஸ்டாண்டிங் ரிப்போர்ட்டர் மற்றும் சர்வதேச வர்த்தகத்தினை (INTA) பிரதி நிதித்துவப்படுத்தும் பாராளுமன்றக் குழுவினரே இதன் போது வருகை தரவுள்ளனர்.
இதில் ஐரோப்பிய கன்சர்வேடிவ்ஸ் மற்றும் சீர்திருத்தவாதிகளின் உறுப்பினர் ஜான் சகாடில், ஸ்டாண்டிங் இன்பர்ஃபோர்டு சஜஜத் கரீம், ஐரோப்பிய மக்கள் கட்சி (EPP) உறுப்பினர் பவுல் ரூபிக், சோசலிஸ மற்றும் ஜனநாயகவாதிகள் உறுப்பினர் டேவிட் மார்டின், Europe of Freedom and Direct Democracy உறுப்பினர் Tiziana Beghin, (ENF) உறுப்பினர் பிரான்சு ஓபர்மேர் ஆகியோரே விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment