கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மத்தள ஊடாக டுபாய் நோக்கி செல்லவிருந்த டுபாய் விமானம் ஒன்றின் இடது பக்க இயந்திரத்தில் பறவை ஒன்று மோதியதால், குறித்த விமானம் இன்று காலை முதல் மத்தள விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
FZ 551 ரக ஃபிளய் டுபாய் விமானத்தின் இடது பக்கம் இயந்திரத்திலேயே பறவை ஒன்று மோதியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 113 பயணிகளுடன் மத்தளவுக்கு சென்ற விமானம் அங்கிருந்த 55 பயணிகளை ஏற்றிச் செல்ல தரையிறக்கிய போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டுபாய் செல்வதற்கு கட்டுநாயக்கவில் இருந்து விமானத்தில் ஏற்றிய 113 பயணிகளும், மத்தள விமான நிலையத்தில் இருந்த 55 பயணிகளும் தொடர்ந்து மத்தள விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு போதிய வசதிகள் இன்மையால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தின் இயந்திரத்தில் பறவைகள் மோதினால், விமான பொறியியலாளரால் பரிசோதனைக்கு உட்படுத்தாது விமானம் புறப்படாது எனவும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பொறியியலாளரை துரிதமாக அழைத்து வரவுள்ளதாகவும் மத்தள விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காலை 7.11 முதல் பிற்பகல் 1 மணி வரை கொழும்பில் இருந்து விமான பொறியியலாளர் மத்தள விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என பிரயாணி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment