ஜனாதிபதியுடனான சந்திப்பு வெற்றியளித்துள்ளதாக ஐ.தே.க அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, April 2, 2018

ஜனாதிபதியுடனான சந்திப்பு வெற்றியளித்துள்ளதாக ஐ.தே.க அறிவிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியே காரணம் எனவும், இதன் காரணமாக அவருக்கும் கட்சிக்கு இடையில் சிறந்த உறவு உள்ளதாகவும் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment