கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நேபாள நாட்டவரின் உடலில் மறைத்து வைக்கப்பட்ட ஹெரோயின் வில்லைகள் மீட்கப்பட்டுள்ளன.
டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளினால் கடந்த 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். இதன்பின்னர் சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அவர் ஹெரோயின் வில்லைகளை வயிற்றினுள் விழுங்கியிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து சந்தேக நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரின் உடலில் இருந்து 90 ஹெரோயின் வில்லைகள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட ஹெரோயின் வில்லைகளின் பெறுமதி சுமார் 90 இலட்சம் ரூபா என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment