கண்டி – குண்டசாலை பகுதியில் மகாவலி ஆற்றில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி பகிரவகந்த பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மகாவலி ஆற்றில் நீராட சென்ற நான்கு இளைஞர்களில் ஒருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பல்லேகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment