தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மையே கலப்பு தேர்தல்முறை பிழையானதென விமர்சனத்துக்குள்ளாகக் காரணமாகும். இதனைக் காரணம் காட்டி மாகாண சபைத் தேர்தல் காலம் தாழ்த்தப்படக் கூடாது என கபே அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டு திருத்தச்சட்டத்துக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை கலப்பு முறையில் நடத்தலாம். ஆனால் மாகாண சபைத் தேர்தல் நடத்துவது குறித்து அரசாங்கம் இது வரையில் எந்த விதமான அறிவிப்பையும் விடுக்காமல் உள்ளது.
பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் அப்பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளமை போன்றன மாகாண சபைத் தேர்தலில் பாரிய தாக்கத்தினை செலுத்தியுள்ளன.
இந்த நெருக்கடி நிலைமையினை மையமாகக் கொண்டு மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடும் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். மாகாணசபை தேர்தலின் அவசியம் குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment