மீண்டும் ஐ.தே. கட்சியின் பாராளுமன்றக்குழு பிரதமர் தலைமையில் கூடுகின்றது - News View

About Us

About Us

Breaking

Sunday, April 1, 2018

மீண்டும் ஐ.தே. கட்சியின் பாராளுமன்றக்குழு பிரதமர் தலைமையில் கூடுகின்றது

பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பது குறித்து ஆராய நாளை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக்குழு பிரதமர் தலைமையில் கூடுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் தனித்தனியே சந்தித்து தனது நிலைப்பாட்டினை பிரதமர் வெளிபடுத்துவார் எனவும் கூறப்படுகின்றது. 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் கடுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. 

கடந்த வாரங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டங்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படும் பங்காளிக் கட்சிகளின் தலைவர் சந்திப்புகள் என இடம்பெற்று வந்த நிலையில் நாளை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் கூடுகின்றது. 

பிரதமரின் அழைப்பின் பெயரில் நாளை காலை அலரிமாளிகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சகல பாரளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாரளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தனித்தனியே சந்தித்து நிலைமைகளை தெளிவுபடுத்தவும் பிரதமர் முயற்சித்து வருகின்றனர் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment