வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் இரு பெண்கள் கைது.! - News View

About Us

About Us

Breaking

Sunday, April 1, 2018

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் இரு பெண்கள் கைது.!

வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக கேரள கஞ்சாவுடன் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து மொனராகலை நோக்கி பஸ்ஸில் கேரளா கஞ்சா கடத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, இந்த தகவலின் அடிப்படையில் வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக இருந்த குறித்த பஸ்ஸை பொலிஸார் சோதனைக்கு நேற்று இரவு 9.30 மணியளவில் உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது, 2 கிலோ கேரளா கஞ்சாவினை வைத்திருந்த அரலங்கவில பகுதியினை சேர்ந்த காஞ்சன சஞ்ஜிவனி (25), காசினி மதுமாலி (26) ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் மீது இவ்வாறான முறைப்பாடுகள் முன்னரும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் அவர்களை ஒப்படைக்க உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment