மன்னார் - வவுனியா பிரதான வீதியில் பிரமனாயங்குளம் பகுதியில் இடம்பெற்ற தனியார் பஸ் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்து சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
மன்னாரில் இருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதில் பஸ் சுமார் 50 மீற்றர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்தோர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பிரமனாயங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ் விபத்தானது தனியார் பஸ் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் ஆகியவற்றுக்கிடையிலான போட்டித்தன்மையினாலேயே இடம்பெற்றுள்ளதாக பயணிகள் விசனம் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment